கழிஞ்சூர் ஏரியில் பிணமாக கிடந்த கட்டிட மேஸ்திரி

கழிஞ்சூர் ஏரியில் பிணமாக கிடந்த கட்டிட மேஸ்திரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிஞ்சூர் ஏரியில் பிணமாக கிடந்த கட்டிட மேஸ்திரி
Published on

வேலூர்

வேலூர் அருகே உள்ள இறைவன்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக கழிஞ்சூரில் வசித்து வந்தார். இவரது மனைவி மலர், தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்குள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள கழிஞ்சூர் ஏரியில் மணிகண்டன் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப் -இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் குடிபோதையில் தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com