மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் தந்தை-மகன் சாவு 2 பேர் படுகாயம்

தேவதானப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் தந்த, மகன் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் தந்தை-மகன் சாவு 2 பேர் படுகாயம்
Published on

தேவதானப்பட்டி:

கார் மோதல்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகிலுள்ள அ.ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 29). விவசாயி. இவரது உறவினர் தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை பார்ப்பதற்காக நேற்று இரவு செல்லப்பாண்டி, அவரது மனைவி கவுரி (26), மகன் ராஜபாண்டி (4), உறவினர் பழனியம்மாள் (43) ஆகியோர் ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை செல்லப்பாண்டி ஓட்டினார். பின்னர் அவர்கள் 4 பேரும் உறவினரை பார்த்து நலம் விசாரித்து விட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் தேவதானப்பட்டி புறவழிச்சாலை பொம்மிநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்தபோது சென்னையிலிருந்து தேனி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

தந்தை-மகன் சாவு

இதில் செல்லப்பாண்டியும், அவரது மகன் ராஜபாண்டியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கவுரி, பழனியம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com