தேவாலயங்களில் குருத்தோலை பவனி

விருதுநகரில் தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
தேவாலயங்களில் குருத்தோலை பவனி
Published on

விருதுநகர்,

விருதுநகரில் தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் விருதுநகர் மறைவட்ட அதிபரும், பங்குத்தந்தையுமான பெனடிக்ட்அம்புரோஸ்ராஜ் அடிகளார், துணை பங்கு தந்தை செபாஸ்டின்அடிகளார் தலைமையில் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். குருத்தோலைபவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது.

பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், எஸ்.எப்.எஸ்.பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார், பொருளாளர் மார்ட்டின் குமார் அடிகளார் ஆகியோர் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னை ஆலய பங்கு தந்தை தாமஸ் அடிகளார் தலைமையிலும், ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை மரிய பென்சிகர் அடிகளார் தலைமையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறையுரையும் ஆலயத்தில் நடைபெற்றது.

தாயில்பட்டி

சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் குழந்தை ஏசு ஆலயத்தின் பங்கு தந்தை ஜெயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது.

தாயில்பட்டியில் உள்ள பரிசுத்த தோமா தேவாலயத்தில் குருத்தோலை பவனி ஊர்வலம் நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ்நிலையம், பச்சையாபுரம், தெற்கு தெரு வழியாக சென்றது. ஊர்வலத்தை பாதிரியார் ஆசீர் ஜெபா தொடங்கிவைத்தார். இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com