நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், போலீசில் சரண் அடைந்தார்.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்
Published on

2-வது திருமணம்

சென்னையை அடுத்த புழல் எம்.ஜி.ஆர். நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 31). எலக்ட்ரீசியன். 8 ஆண்டுகளுக்கு முன்பு கலா(25) என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணமானது. இவர்களுக்கு 2 மகன்கள்.

கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர். மனைவியை பிரிந்த இளங்கோவன், தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.

அதன்பிறகு சென்னை பாரிமுனையில் வேலைக்கு சென்ற போது அங்கு வெண்ணிலா(30) என்ற மற்றொரு பெண், இளங்கோவனுக்கு அறிமுகமானார். வெண்ணிலாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. தற்போது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகினர். 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வசித்து வந்தனர்.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் இளங்கோவனுக்கு வெண்ணிலாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை வழக்கம்போல் கணவன்-மனைவி இருவருக்கும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன், வீட்டில் இருந்த கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த வெண்ணிலா, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

போலீசில் சரண்

இதையடுத்து இளங்கோவன், புழல் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் சோபனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான வெண்ணிலா உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், சரண் அடைந்த இளங்கோவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com