கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் மத்தியபாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாராம். இதனால் மணிகண்டனுக்கு மாஜிஸ்திரேட்டு பிடிவாரண்டு பிறப்பித்தார். அதன்பேரில் மத்தியபாகம் போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com