காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

கமுதி அருகே காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
Published on: 

கமுதி,

கமுதி அருகே தாய்,தந்தை இறந்து விட்ட நிலையில் 29 வயது பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பக்கத்து கிராமமான கூடலாவூருணியை சேர்ந்த பாஸ்கரன் மகன் தனசேகரன் (வயது24) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறி கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தனசேகரன் அவரிடம் நெருங்கி பழகியதில் அவர் கர்ப்பமாகி விட்டார்.

இதுபற்றி அந்த பெண் பலமுறை எடுத்து கூறியும் தனசேகரன் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இதையடுத்து அவர் மண்டலமாணிக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து கமுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து தனசேகரனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com