ஜோலார்பேட்டை அருகே கட்டிட தொழிலாளியின் மனைவி மாயம்

ஜோலார்பேட்டை அருகே கட்டிட தொழிலாளியின் மனைவி மாயமானார்.
ஜோலார்பேட்டை அருகே கட்டிட தொழிலாளியின் மனைவி மாயம்
Published on

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பழனி வட்டத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவரின் கள் மதுமித்ரா (20). இவருக்கும் சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான புஷ்பராஜ் என்பவருக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இரவு வீட்டில் இருந்த மதுமித்ரா திடீரென மாயமாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை.

மதுமித்ராவை காணவில்லை என தந்தை முருகன் ஜோலார்பேட்டை போலீசில் புகா செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண்ண தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com