காய்கறி வியாபாரி தீக்குளித்து தற்கொலை

மேலூர் அருகே காய்கறி வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
காய்கறி வியாபாரி தீக்குளித்து தற்கொலை
Published on

மேலூர்,

மேலூர் அருகே நாயத்தான்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் வெள்ளலூர் பகுதி மற்றும் சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலை நேரத்தில் செல்வராஜ் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அலறிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com