கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பாரதியார் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 34), இவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென குளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com