பீகாரில் மொகரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி 14 பேர் படுகாயம்
பீகாரில் மொகரம் பண்டிகை ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி 14 பேர் படுகாயமடைந்தனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள பிப்ரா பிஜ்வாரா பகுதியில், இன்று மொகரம் பண்டிகையை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின்போது எதிர்பாராத விதமாக சந்தனக்கூட்டின் மேல்பகுதி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது.
இதனால் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 14 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அராரியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story