முன்னாள் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 15 கிலோ தங்கம், ரூ. 20 கோடி பறிமுதல்

மினர் மண்டலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 15 கிலோ தங்கம், ரூ. 20 கோடி பறிமுதல்
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் பிரம்பு மாவட்டம் டுகட்ச் பகுதியை சேர்ந்தவர் மினர் மண்டல். இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி பின்னர் அப்பணியில் இருந்து விலகினார். பின்னர், தனது மைத்துனரான தொழிலதிபர் துலு மண்டலின் கிரைனைட் தொழிலை மினர் மண்டல் கவனித்து வந்தார்.

15 கிலோ தங்கம், ரூ. 20 கோடி

இந்நிலையில், மினர் மண்டல் வீட்டில் போலீசார் நேற்று திடீர் சோதனை செய்தனர். சட்டவிரோத பணபரிவர்த்தனை உள்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக மினர் மண்டல் வீட்டில் சோதனை நடைபெற்றது.

சோதனையில் மினர் மண்டல் வீட்டில் இருந்து 15 கிலோ தங்கம், ரூ. 20 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மினர் மண்டலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com