பல ஆண்களுடன் தொடர்பு: மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கைது


Image courtesy : bhaskar.com
x
Image courtesy : bhaskar.com
தினத்தந்தி 18 Jun 2021 12:10 PM GMT (Updated: 18 Jun 2021 12:54 PM GMT)

தீப்தி சோனியை திட்டமிட்டு அவரது கணவர் தேவேந்திரா, பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி ஷாலு ஆகியோர் கொலை செய்துள்ளனர்.

பிலாஸ்பூர்:

சத்தீஸ்கார் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த தேவேந்திராவின் மனைவி தீப்தி சோனி (28). இவரை, வங்கிக்கு அழைத்து செல்வதாக கூறி அவரது கணவர் பலோடா அழைத்து சென்றார். பின்னர், வீடு திரும்பும் போது கிசோரா என்ற கிராமத்தில் காரை நிறுத்தினார். இரவு நேரம் என்பதால், தான் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, மனைவியை காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றார். 

ஆனால் திரும்பிவந்து பார்க்கும் போது காரில் பிணமாக கிடந்து உள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார்  காரில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த தீப்தி சோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தேவேந்திராவிடம் விசாரித்த போது, தான் இயற்கை உபாதை கழிக்க சென்றதாகவும், அந்த நேரத்தில் காரில் இருந்த மனைவியை கொலைசெய்து விட்டு அவரிடம்  இருந்த நகைகளை மர்ம கும்பல்  கொள்ளையடித்து விட்டு  தப்பிவிட்டதாக கூறினார்.

ஆனால் போலீசார் விசாரணையில் கணவர் ஆட்களை ஏவி மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தீப்தி சோனியை திட்டமிட்டு அவரது கணவர் தேவேந்திரா, பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி ஷாலு ஆகியோர் கொலை செய்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மனைவியை கொல்வதற்காக பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி ஷாலுவுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை தேவேந்திரா கொடுத்துள்ளார். ஆனால், எங்களிடம் கொள்ளை கும்பல் கொலை செய்ததாக மூவரும் கூறினர். 

தீப்தி சோனி  உல்லாச வாழ்க்கையை வாழ்வதற்காக பலருடன் தொடர்பில் இருந்துள்ளார். அதனால், மனைவியை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, வங்கிக்கு சென்று வர வேண்டும் எனக்கூறி அழைத்து சென்றுவிட்டு வரும் வழியில் தீப்தி சோனியை வேலைக்காரர்களுடன் சேர்ந்து கொலை செய்து உள்ளார்.பிரதீப் சோனியும், ஷாலுவும் ஏற்கனவே சம்பவ இடத்தில் பதுங்கி இருந்தனர். 

தேவேந்திராவும் ஷாலுவும் தீப்தியை காருக்குள் பிடித்து கொண்டனர் . இதன் பின்னர், பிரதீப் ஒரு கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, தீப்திக்கு தனது பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லை. இந்த தம்பதியருக்கு 7 வயது மகள் உள்ளார். பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறினாலும், யார்  பெயரையும் தேவேந்திரா கூறவில்லை.  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என் கூறினர்.

Next Story