ஒடிசாவில் தயிர் வடை சாப்பிட்ட 58 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

உடல்நலம் பாதிக்கப்பட்ட 27 குழந்தைகள் உள்பட 58 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒடிசாவில் தயிர் வடை சாப்பிட்ட 58 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
Published on

புவனேசுவரம்,

ஒடிசா மாநிலம் படாபூர் கிராமத்தில் உள்ள சிலர் உள்ளூர் வியாபாரி ஒருவர் விற்ற தயிர் வடையை வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்ட சில மணி நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் வந்து பலர் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 27 குழந்தைகள் உள்பட 58 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு 21 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி முகேஷ் மஹா லிங், ஜாஜ்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு 3 குழுக்களை அமைத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com