விளையாடிக்கொண்டிருந்தபோது அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பலி


விளையாடிக்கொண்டிருந்தபோது அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பலி
x
தினத்தந்தி 11 July 2024 3:20 AM IST (Updated: 11 July 2024 6:23 AM IST)
t-max-icont-min-icon

விளையாடிக்கொண்டிருந்தபோது அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி உயிரிழந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சப் அர்பன் மாவட்டம் கண்டிவாலி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் உள்ள வீட்டில் நேற்று சிறுவர், சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அக்ஷயா என்ற 9 வயதான சிறுமி அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story