மக்களவையில் நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா அறிமுகம்

மக்களவையில் நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
மக்களவையில் நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா அறிமுகம்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி புதிய நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். நீட் கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடு பட்டு இருந்தனர். இந்த சலசலப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை அவர் தாக்கல் செய்தார். இது விரைவில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com