பாஜக தலைவர் நிதின் நபின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்

கட்சி எனக்கு வழங்கியுள்ள இந்தப் புதிய பொறுப்பில் பாங்கிபூர் தொகுதி மற்றும் பீகாரின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பேன்.
பாஜக தலைவர் நிதின் நபின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
Published on

பாட்னா,

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாஜக தேசியத்தலைவர் நிதின் நபின் இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பாங்கிபூர் தொகுதிக்கான அவரது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் சஞ்சய் சரோகி அதனை சட்டமன்ற சபாநாயகர் பிரேம் குமாரிடம் சமர்ப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார் "நிதின் நபினின் ராஜினாமா கடிதத்தை சரோகி என்னிடம் சமர்ப்பித்தார் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் நடைமுறைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதை அனுப்பியுள்ளேன்" என்றார்.

இன்று நபின் தனது எக்ஸ்தளத்தில் தெரிவித்திருப்பதாவது :- "இன்று பாங்கிபூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்" கடந்த 20 ஆண்டுகளாக, எனது மறைந்த தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹா ​​அவர்களால் அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியை வளர்த்து மேம்படுத்த நான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். எனது தொகுதி மற்றும் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நான் எப்போதும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன்.

"கட்சி எனக்கு வழங்கியுள்ள இந்தப் புதிய பொறுப்பில் பாங்கிபூர் தொகுதி மற்றும் பீகாரின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com