போர் பிரச்சினை தீர்ந்ததும்; வணிக கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும்-மத்திய மந்திரி

பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், கியாஸ் கிடைப்பதில்லை என்று கூறினார்.
போர்  பிரச்சினை தீர்ந்ததும்; வணிக கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும்-மத்திய மந்திரி
Published on

பெங்களூரு,

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி. கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வணிக கியாஸ் சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. அந்தந்த எண்எணய் நிறுவனங்கள்தான் உயர்த்தி உள்ளன. விலையை உயர்த்தும் அதிகாரத்தை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தது.

பாகிஸ்தான் உள் ளிட்ட நாடுகளில் பெட்ரோல், கியாஸ் கிடைப்பதில்லை. நமது நாட்டில் தட் டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. ஈரான், அமெரிக்கா இடையிலான போர் விவகாரம் முடிவுக்கு வந்ததும் வணிக கியாஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு நிச்சயம் எடுக் கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com