சர்ச்சை பேச்சு: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானுக்கு 2 ஆண்டு சிறை

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பயன்படுத்திய காலணிகளை சில உயரதிகாரிகள் சுத்தம் செய்ததாக புகைப்படங்களில் பார்த்ததாகவும் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சர்ச்சை பேச்சு: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானுக்கு 2 ஆண்டு சிறை
Published on

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் போட்டியிட்டார். தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “மாவட்ட ஆட்சியர் என்பது சம்பளம் பெறும் அரசு ஊழியர் மட்டுமே. அவரைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பயன்படுத்திய காலணிகளை சில உயரதிகாரிகள் சுத்தம் செய்ததாக புகைப்படங்களில் பார்த்ததாகவும் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், ராம்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆசம் கானை குற்றவாளி என கோர்ட் அறிவித்தது. அதன்படி, அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com