புதிய ஆதார் செயலி பதிவிறக்கம் 2 கோடியை தாண்டியது

இந்த ஆதார் செயலியில் செல்போன் எண் மற்றும் முகவரி புதுப்பிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
புதிய ஆதார் செயலி பதிவிறக்கம் 2 கோடியை தாண்டியது
Published on

புதுடெல்லி,

புதிய ஆதார் செயலி, 3 மாதங்களுக்குள் 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன், மக்களிடையே வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் ஆதார் செயலியை பயன்படுத்தி, செல்போன் எண் மற்றும் முகவரி புதுப்பிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் இதில் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிய ஆதார் செயலியை பயன்படுத்தி தங்களது செல்போன் எண்களை புதுப்பித்துள்ளனர். அதேபோல், ஏறத்தாழ 6 லட்சம் மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது முகவரியை புதுப்பித்துள்ளனர்.

இந்த புதிய செயலியில் பல்வேறு வசதிகள் உள்ளன. இது 'ஆண்ட்ராய்டு' மற்றும் 'ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.' ஆகிய 2 இயங்கு தளங்களிலும் கிடைக்கிறது என்றும், மக்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com