டெல்லியில் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
Published on

டெல்லி,

சர்வதேச போதைப்பொருள் கும்பலிடமிருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுவதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், இந்த போதைப்பொருள் நாட்டின் பிற பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் ஆபரேஷன் வஜ்ரா என்ற பெயரில் போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். டெல்லியில் நடந்த இந்த சோதனையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1000 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த உமேஷ்குமார், பிரதவுஸ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com