நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்: பீகார் அரசு

நீட் மறுதேர்வு எழுதும் அனைத்து மாணவர் களும் பீகார் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று பீகார் மாநில முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி தனது 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம்: பீகார் அரசு
Published on

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு கடந்த 3-ந் தேதி நடந்தது. வினாத்தாள் கசிவு காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அடுத்த மாதம் 21-ந் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்நிலையில், நீட் மறுதேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் பீகார் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று பீகார் மாநில முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி தனது 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்வு நாளில் மட்டும் இந்தச் சலுகை கிடைக்குமா அல்லது தேர்வு நாள்வரை எல்லா நாட்களும் கிடைக்குமா என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், நீட் மறுதேர்வு எழுத வரும் மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கு பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com