நகைக்கடையில் திருட முயன்ற சிறுமிகள்.! அதிர்ச்சி வீடியோ

பட்டப்பகலில் சிறுமிகள் நகைகளை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகைக்கடையில் திருட முயன்ற சிறுமிகள்.! அதிர்ச்சி வீடியோ
Published on

பாட்னா,

நகை வாங்க வந்த சிறுமிகள்

பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று பிற்பகலில் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு இரண்டு சிறுமிகள் வந்தனர். அவர்கள் கடைக்காரரிடம் காதணிகளை வாங்க வந்துள்ளதாகவும், காதணிகளை காண்பிக்குமாறும் கூறியுள்ளனர்.

இதன் பேரில் கடை உரிமையாளரான ராஜேஷ் குமார், காதணிகளை எடுத்து சிறுமிகளின் முன் வைத்துள்ளார். சிறுமிகள் இருவரும் காதணிகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மற்றொரு சிறுமி திடீரென, தான் வைத்திருந்த மிளகு ஸ்பிரேவை எடுத்து கடை உரிமையாளர் மீது அடித்தார்.

கையும், களவுமாக சிக்கினர்

இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ராஜேஷ் குமார், துரிதமுடன் செயல்பட்டு கடைக்கு வெளியே ஓடி, கடையின் கதவை அடைத்தார். இதனால் இரண்டு சிறுமிகளும் கடைக்கு உள்ளேயே மாட்டிக்கொண்டனர். இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் இரு சிறுமிகளையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

சிறுமிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சிறுமிகள் இருவர் நகைகளை வாங்குவது போல் நடித்து கடைக்காரர் முகத்தில் ஸ்பிரே அடித்து நகைகளை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com