அரியானா: பாதுகாப்பு வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதல்; மந்திரி காயம்

அரியானா பா.ஜ.க. தலைவர் மோகன் லால் பதோலியும் உறுதிப்படுத்தி உள்ளார்.
அரியானா:  பாதுகாப்பு வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதல்; மந்திரி காயம்
Published on

பானிபட்

அரியானாவின் அம்பாலா, பஞ்ச்குலா மற்றும் சோனிபத் மாநகராட்சிகளில் உள்ள மேயர்கள் மற்றும் அனைத்து வார்டுகளிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நாளை (10-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் அம்பாலாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரியானா மந்திரி கிஷன் லால் பன்வார், அதனை முடித்து விட்டு சோனிபத்துக்கு திரும்பினார். அப்போது, அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியது.

இந்த சம்பவத்தில் மந்திரி பன்வாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனை அரியானா பா.ஜ.க. தலைவர் மோகன் லால் பதோலியும் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், பன்வாருக்கு சில நாட்கள் மருத்துவ சிகிச்சை தொடரும். அவர் உடல்நலத்துடன் உள்ளார். எனினும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார் என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com