உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - 12 பேர் பலி


உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - 12 பேர் பலி
x
தினத்தந்தி 13 Sept 2024 7:08 AM IST (Updated: 13 Sept 2024 8:05 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 28.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 28.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களில், 51 மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. இதில் ஹத்ராஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 185.1 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மதுரா மாவட்டத்தில் தொடர் மழையால் 31 வீடுகள் பகுதியளவில் இடிந்து விழுந்தன. இந்த நிலையில், உத்தரபிரதேசம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மைன்புரியில் 5 பேரும், மதுராவில் 2 பேரும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்ததாக உத்தரபிரதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் பெய்த மழையைக் கருத்தில் கொண்டு, அதிக மழை பெய்யும் மாவட்டங்களை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தேவைக்கேற்ப மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story