மழையால் பாதித்தவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்

மண்டியாவில் மழையால் பாதித்தவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.
மழையால் பாதித்தவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்
Published on

மண்டியா;

மண்டியா மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து கலெக்டர் அஸ்வதி தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அஸ்வதி கூறியதாவது:-

மண்டியா மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், மாவட்ட மற்றும் தாலுகா அதிகாரிகள் முன்எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை அளிக்கவேண்டும். மண் சரிவு மற்றும் விரிசல் ஏற்பட்ட சாலைகளை பார்வையிட்டு உடனே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளுங்கள்.

கனமழைக்கு சுற்றுலா தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன், எச்சரிக்கை பலகை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுங்கள்.

தாழ்வான பகுதிகளில் சிக்கி கொண்டு தவிப்பவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதித்தவர்களுக்கு உடனே நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com