தேச பாதுகாப்பில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது: அமித்ஷா

குற்றப்புகார் இணையதளத்தின் செயல்பாடுகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு செய்தார்.
தேச பாதுகாப்பில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது: அமித்ஷா
Published on

புதுடெல்லி,

இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் குற்றப் புகார் இணையதளம் ஒன்று கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. இதில் சைபர் கிரைம் போலீசாருடன் வங்கித்துறை. பண பரிவர்த்தனை கழகம் போன்றவையும் இணைந்து செயல்படுகின்றன. இந்த இணையதளத்தின் செயல்பாடுகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது. புகார் அளிப்பதை எளிதாக்கும் வகையில் அதில் ஏ.ஐ. மற்றும் பன்மொழி ஆதரவை பயன்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட் டுக்கொண்டார். இதற்கிடையே அவர் மத்திய பா.ஜனதா அரசின் 12 ஆண்டு கால தேச பாதுகாப்பு பற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

அதில், "மோடி அரசின் 12 ஆண்டுகளில், நமது தேசம் குடிமக்களை பாதுகாத்து, எதிரிகள் மீது பேரழிவை ஏவிவிடும் ஒரு பாதுகாப்பு அரணாக மீண்டும் கட்டமைக்கப்பட்டு உள்ளது. தேச பாதுகாப்பில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com