

ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 நக்சல்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் 14 வயது சிறுவனும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரானியா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரங்ரோடி கிராமத்தில் வைத்து அந்த 3 நக்சல்களையும் கைது செய்தனர்.
அவர்களில் விஸ்ராம் கொங்காடி மற்றும் குலென் கொங்காடி ஆகிய இருவரும் ஏற்கெனவே சில வழக்குகளில் தேடப்படுபவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து தோட்டாக்கள், செல்போன்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் இந்திய மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தின் பிரசுரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.