ஜம்மு காஷ்மீரில் பயங்கர நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

தோடா-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கர நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் தோடா(Doda) மாவட்டத்தில் உள்ள புல் தோடா அருகே இருக்கும் கட்சூ(Gatsoo) பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியின் முக்கிய போக்குவரத்து பாதையான தோடா-கிஷ்த்வார் (Doda-Kishtwar)தேசிய நெடுஞ்சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு காரணமாக ராட்சத பாறைகளும், மண்ணும் சாலையை மூடியுள்ளதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு சாலை அமைப்பினர் (BRO) மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com