எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகிவிட்டது - பரபரப்பு வீடியோ வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வழியைப் பின்பற்ற நான் முடிவு செய்துள்ளேன் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகிவிட்டது - பரபரப்பு வீடியோ வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மாவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,

நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மாவிடம் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகிவிட்டது.

அவர் முன்பு நான் இனி நேரடியாக ஆஜராகியோ, வழக்கறிஞர் வைத்தோ வாதிட மாட்டேன். எனவே, மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வழியைப் பின்பற்ற நான் முடிவு செய்துள்ளேன்.

எனது மனசாட்சியின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் உரிமையை நான் கொண்டுள்ளேன் என அதில் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com