முதல்-அமைச்சர் விஜய்க்கு பினராயி விஜயன் வாழ்த்து

மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப்பெரிய பொறுப்பாகும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு பினராயி விஜயன் வாழ்த்து
Published on

திருவனந்தபுரம்,

தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு கேரளத்தின் முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப்பெரிய பொறுப்பாகும். தமிழக மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை, மக்கள் நலன் ஆகிய விழுமியங்களைக் காக்கும் ஓர் அரசாங்கமாக மாறும் என நம்புகிறேன்.

கேரளமும், தமிழ்நாடும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள். இரு மாநில மக்களும் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் உறுதிமொழி எடுத் துள்ளனர். ஒருமித்த கருத்துடன், இரு மாநில மக்களும் இணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com