குஜராத் விமான விபத்து; 204 பேர் உயிரிழந்ததாக தகவல்

விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி, 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Live Updates
- 12 Jun 2025 2:31 PM IST
விமான விபத்து; குஜராத் முதல்-மந்திரியிடம் அமித்ஷா பேச்சு
விமான விபத்து குறித்து குஜராத் முதல்-மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் காவல்துறை ஆணையரிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். மேலும் மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.







