இரண்டு நாள் பயணமாக நாளை புரூனே செல்கிறார் பிரதமர் மோடி
புருனே பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார்.
புதுடெல்லி,
இந்தியா -புரூனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி பிரதமர் மோடி புரூனே செல்கிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு புரூனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்கிறார்.
புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார். இந்தியா -சிங்கப்பூர் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்தியா -சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதில் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story