பிரதமர் மோடியின் செல்பி வீடியோ: மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்டது ஒரு செயல்பாட்டுப் பிழை என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதிகளுடன் பிரதமர் மோடி செல்பி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளை கடந்து உலக சாதனை படைத்தது.

அப்போது பிரதமர் மோடியின் பேஸ்புக் வீடியோ சிறிது நேரம் தவறுதலாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நீக்கம் நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளது, பின்னர் அந்த வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது என விளக்கம் அளித்தது. பிரதமர் மோடியின் வீடியோ நீக்கப்பட்டது ஒரு செயல்பாட்டுப் பிழை என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே மெட்டா நிறுவனத்தின் சர்வதேச தலைவருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com