ராகுல்காந்தி பெங்களூரு வருகை

கர்நாடாகவில் இருந்து மாநிலங்களவைக்கு மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுகிறார்.
Mallikarjun Kharge,Rahul-Gandhi
Published on

பெங்களூரு,

மாநிலங்களவை தேர்தல்

நேற்று இரவு வெளியிடப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான மாநிலங்களவை வேட்பாளர்களை கட்சியின் மத்திய தலைமை அறிவித்தது.

கர்நாடக மாநிலங்களவை தேர்தல்

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் 4 இடங்கள் காலியாகின்றன. இந்த 4 இடங்களுக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனுத்தாக்கல் செய்ய வருகிற 8-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

கர்நாடகத்தில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைப்பது உறுதி. காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுகிறார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் உள்ள சட்ட சபை செயலாளரிடம் மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

ஜுன் 25

கார்கேவின் தற்போதைய மாநிலங்களவை பதவிக்காலம் ஜுன் 25-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அவர் மீண்டும் அதே மாநிலத்தில் இருந்து களமிறக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் பவன் கேரா மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் கர்நாடகாவில் போட்டியிடுகின்றனர்.

ராகுல்காந்தி வருகை

இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனி விமானம் மூலம் இன்று பெங்களூரு வருகிறார். இன்னும் 2 இடங்களுக்கு வேட்பாளர்கள் யார் என்று தெரியவில்லை. விரைவில் முறைப்படி வேட்பாளர் கள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com