நீர் யானை தாக்கியதில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் பலி


நீர் யானை தாக்கியதில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் பலி
x
தினத்தந்தி 28 July 2024 4:06 PM IST (Updated: 28 July 2024 4:51 PM IST)
t-max-icont-min-icon

நீர் யானை தாக்கியதில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் உயிரிழந்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், புலி, முதலை, நீர் யானை உள்பட பல்வேறு விலங்குகளும், பல்வேறு வகை பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பூங்காவில் சந்தோஷ் குமார் மஹ்டோ (வயது 54) என்பவர் பராமரிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பூங்காவில் உள்ள நீர்யானை சமீபத்தில் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த குட்டியை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல சந்தோஷ் குமார் முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த இருந்த நீர் யானை சந்தோஷ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சந்தோஷ் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story