தமிழ்நாட்டில் மிக எளிதாக ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள் - பவன் கல்யாண் ஆதங்கம்

நான் 15 ஆண்டுகளாக அரசியலில் பயணம் செய்தும் இந்தளவு பெரிய வெற்றியை பார்த்ததில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண்
Published on

ஐதராபாத்,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அரசியலில் பெரும் திருப்பத்தையே ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் பதவியேற்ற அன்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசியல் சூழல்

இந்த நிலையில், ஆந்திராவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விஜய் பற்றியும் தமிழக அரசியல் சூழல் பற்றியும் பவன் கல்யாண் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் மிக எளிதாக ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். ஆந்திராவில் நான் 15 ஆண்டுகளாக அரசியலில் பயணம் செய்தும் இந்தளவு பெரிய வெற்றியை பார்த்ததில்லை. எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com