வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு


தினத்தந்தி 23 July 2024 9:15 AM IST (Updated: 23 July 2024 1:45 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

டெல்லி,

Live Updates

  • 23 July 2024 1:41 PM IST

    புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம்

    புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

    புதிய வருமான வரி விதிப்பு முறையில் நிலையான கழிவு (Standard Deduction) 50 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் அது 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை:

    புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது.

    ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை

    ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருந்தால் 5 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது உச்ச வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை

    ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருந்தால் 10 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ.6 லட்ச ரூபாய் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 10 சதவீத வரி விதிக்கபப்ட்டது. ஆனால், தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை

    ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்தால் 15 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமான வரி 15 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்தால் 15 சதவீத வருமான வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் வரை

    ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருந்தால் 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவும் இதே நிலையே நீடித்து வந்தது.

    ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு மேல்

    ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு மேல் இருந்தால் 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவும் இதே நிலையே நீடித்து வந்தது.

  • 23 July 2024 12:49 PM IST

    புதிய வருமான வரி முறையில் புதிய சலுகைகள்

    தனிநபர் ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரி இல்லை. அதேபோல், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் முதல் ரு. 7 லட்சம் வரை இருந்தால் 5 சதவீதம் வருமானவரி செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இருந்தால் 10 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.

    வருமானம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை இருந்தால் 15 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம் வரை இருந்தால் 20 சதவீத வருமானவரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 23 July 2024 12:40 PM IST

    தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை

    தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சரவம்பில் மாற்றமில்லை என்று மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறையில் மாற்றமில்லை என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 July 2024 12:36 PM IST

    செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் வரியும் குறைக்கப்படும். இதன்படி, இவற்றின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

  • 23 July 2024 12:35 PM IST

    விண்வெளி, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு துறைகளில் 25 முக்கிய தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 2 பொருட்களுக்கு வரி குறைக்கப்படுகிறது.

  • 23 July 2024 12:25 PM IST

    தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு

    தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • 23 July 2024 12:23 PM IST

    பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள், விளையாட்டு கட்டமைப்பு அரங்கங்கள் புதிதாக அமைக்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

  • 23 July 2024 12:19 PM IST

    3 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரியிலிருந்து விலக்கு

    3 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • 23 July 2024 12:19 PM IST

    கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ. 2.66 லட்சம் கோடி

    கிராமப்புற வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


Next Story