மத்திய மந்திரி பியூஷ் கோயல் கனடாவுக்கு 3 நாள் பயணம்

கனடா நாட்டின் முன்னணி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
மத்திய மந்திரி பியூஷ் கோயல் கனடாவுக்கு 3 நாள் பயணம்
Published on

புதுடெல்லி

மத்திய மந்திரி பியூஷ் கோயல் நாளை மறுநாள் கனடாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலான அவருடைய 3 நாள் பயணத்தில் இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே நடந்து வரும், விரிவான பொருளாதார மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தம் மேம்படுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

அவருடன் இந்தியாவில் இருந்து, உலோகம் மற்றும் சுரங்கம், எரிசக்தி, தானியங்கி மற்றும் முதலீட்டு சரக்குகள், விண்வெளி, சுற்றுலா, தோல் மற்றும் ஆடை, வேளாண்மை, தொலைதொடர்பு மற்றும் மருந்து துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்களை சேர்ந்த மூத்த பிரதிநிதிகள் செல்ல உள்ளனர்.

இந்த பயணத்தில், வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்புகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாட உள்ளார். கனடடாவின் பிரதமர் கார்னியை சந்தித்து, இருதரப்பு கூட்டங்களையும் நடத்த உள்ளார்.

கனடா நாட்டின் முன்னணி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com