12 மூட்டை கொரோனா நிவாரண அரிசி திருட்டு


12 மூட்டை கொரோனா நிவாரண அரிசி திருட்டு
x

காரைக்காலில் அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா நிவாரணமாக வழங்க வைத்து இருந்த 12 மூட்டை அரிசி திருடிய தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்காலில் அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா நிவாரணமாக வழங்க வைத்து இருந்த 12 மூட்டை அரிசி திருடிய தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

இலவச அரிசி மூட்டை

காரைக்கால் தீப்பாச்சியம்மன்கோவில் தெரு விரிவாக்கம் பகுதியில் வசிப்பவர் விஜயகுமார் (வயது43). இவர் காரைக்கால் நேருநகரில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவியாக வழங்க குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம் 100 மூட்டை அரிசி பள்ளி வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து, கடந்த 25.5.2022-ம் தேதி அன்று அரிசி மூட்டைகளை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி சுபாஷ் ஆய்வு செய்தார்.

தலைமை ஆசிரியர் கைது

அப்போது 12 மூட்டை அரிசியை காணவில்லை என தெரியவந்தது. விசாரணையில், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் 12 மூட்டை அரிசியை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல்துறை அதிகாரி சுபாஷ் காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மரிகிறிஸ்டியன்பால், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிசி மூட்டைகளை திருடிச்சென்றதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர், காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த அரிசி மூட்டை திருட்டில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story