189 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


189 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x

புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் உடன் துணை கலெக்டர் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள்

காரைக்காலில் இருந்து புதுவைக்கு 189 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைத்தனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மென்பொருள் மேம்பாட்டுக்காக 181 வி.வி.பாட் எந்திரங்களும், பழுதடைந்த நிலையில் உள்ள 8 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 189 எந்திரங்களை புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு இன்று அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், துணைத் தேர்தல் அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் மேற்பார்வையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, வாக்குப் பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்த பெங்களூரில் உள்ள நிறுவனத்துக்கு அவை புதுச்சேரியில் இருந்து அனுப்பப்பட உள்ளதாக காரைக்கால் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story