ரவுடி உள்பட 2 பேர் கைது


ரவுடி உள்பட 2 பேர் கைது
x

புதுச்சேரியில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவை அண்ணா சாலையில் இன்று மதியம் 2 வாலிபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் கே.டி. தோட்டத்தை சேர்ந்த ரவுடி சஞ்சய்குமார் (வயது 19), ஆட்டுப்பட்டியை சேர்ந்த தமிழரசன் (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கத்திகளை பறிமுதல் செய்தனர்.


Next Story