விவசாய கூட்டுறவு சங்க ஊழியர்கள் 2 பேருக்கு சிறை


விவசாய கூட்டுறவு சங்க ஊழியர்கள் 2 பேருக்கு சிறை
x

போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற உதவி செய்த விவசாய கூட்டுறவு சங்க ஊழியர்கள் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி

புதுவை சேலியமேடு அரசு விவசாய கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் ஊழியர்களான திருமலை, சீனிவாசன் ஆகியோர் போலியான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிலருக்கு கடன் பெற உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 1997-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த தொடர்பான வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் தலைமையில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் திருமலைக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.56 ஆயிரம் அபராதமும், சீனிவாசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரவீன்குமார் ஆஜரானார்.


Next Story