4 பவுன் தங்க சங்கிலி திருட்டு


4 பவுன் தங்க சங்கிலி திருட்டு
x

நகை வாங்குவது போல நடித்து 4 பவுன் தங்க சங்கிலியை திருடிச்சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

நகை வாங்குவது போல நடித்து 4 பவுன் தங்க சங்கிலியை திருடிச்சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தங்க சங்கிலி திருட்டு

புதுச்சேரி சாரம் ராஜா அய்யர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). செட்டி தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகை கடைக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்களுக்கு ராஜா பல்வேறு மாடல் தங்கநகைகளை எடுத்து காட்டினார்.

சிறிது நேரத்தில் அவர்கள் நகைகள் பிடிக்கவில்லை என்று கூறி விட்டு அங்கிருந்து அவசரமாக சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜா கடையில் இருந்த நகைகளை பார்த்தார். அதில் 4 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

உடனே கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது நகை வாங்குவது போல் வந்த ஆணும், பெண்ணும் நைசாக 4 பவுன் தங்கசங்கிலியை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் பெரியகடை போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா ஆதாரத்துடன் புகார் செய் தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப் பதிவு செய்து நகை திருடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story