தவறி விழுந்த முதியவர் பலி


தவறி விழுந்த முதியவர் பலி
x

மூலக்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

மூலக்குளம்

முத்தியால்பேட்டை சோலைநகர் நடுத்தெருவை சேர்ந்தவர் கூத்தன் (வயது 73). வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று ரெட்டியார்பாளையத்தில் வசிக்கும் தனது மகளை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். ரெட்டியார்பாளையம் இந்தியன் வங்கி அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பிரேக் போட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story