தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு


தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
x

புதுச்சேரி கோவிந்தசாலை புதுநகரை சேர்ந்த தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கோவிந்தசாலை புதுநகரை சேர்ந்தவர் முருகன் (வயது38). சென்ட்ரிங் தொழிலாளி. அதே பகுதியில் கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி முருகன், குடும்பத்தாருடன் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் 3-ந் தேதி இரவு வேலைகளை முடித்துவிட்டு முருகன், அவரது மனைவி, தங்கை ஆகியோர் அங்கேயே படுத்து தூங்கினர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது முருகன், அவரது மனைவி, தங்கை ஆகியோரின் 3 செல்போன்கள் மாயமாகி இருந்தது. இதுபற்றி விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (20), அரவிந்தன் (19), ஹரிகிருஷ்ணன் (18) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் முருகன் விசாரித்தபோது அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சஞ்சய்குமார், அரவிந்தன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story