தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்


தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
x

புதுவை மாநிலம் ஏனாம் பகுதியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனாம்

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் குரியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கொக்கிளி கடா நாகுரு (வயது 35). தொழிலாளியான இவர், அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல் ஏற்றி வந்த லாரி அந்த பகுதியை சேர்ந்த காசி அச்சாயம்மா (34) என்பவரது வீட்டு படிக்கட்டில் மோதியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர், கொக்கிளி கடா நாகுருவிடம் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காசி அச்சாயம்மா தனது உறவினர்கள் ரமேஷ் (19), காரி சிம்காரி (19), மல்லாடி துர்காராவ் (45), சங்கடி கங்காதரி (25) ஆகியோருடன் சேர்ந்து கொக்கிளி கடா நாகுருவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி அச்சாயம்மா உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story