சட்டமன்ற கூட்ட அரங்கு பராமரிப்பு


சட்டமன்ற கூட்ட அரங்கு பராமரிப்பு
x

சட்டமன்ற கூட்ட தொடர் வருகிற 10-ந் தேதி தொடங்குவதையொட்டி, கூட்ட அரங்கு பராமரிக்கப்பட்டது. மேலும் பொது சேவைமையம் அமைப்பது தொடர்பாகவும் சபாநாயகர் தலைமையில் ஆலோசனை நடந்தது.

புதுச்சேரி

சட்டமன்ற கூட்ட தொடர் வருகிற 10-ந் தேதி தொடங்குவதையொட்டி, கூட்ட அரங்கு பராமரிக்கப்பட்டது. மேலும் பொது சேவைமையம் அமைப்பது தொடர்பாகவும் சபாநாயகர் தலைமையில் ஆலோசனை நடந்தது.

10-ந் தேதி கூடுகிறது

புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்ற உள்ளார்.

சட்டமன்றம் கூடுவதையொட்டி சட்டமன்ற கூட்ட அரங்கில் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஒலிபெருக்கிகள், ஏ.சி., மின்சாதனங்கள் சரிவர செயல்படுகின்றனவா? என்பது தொடர்பாக பணியாளர்கள் சரி பார்த்தனர். மேலும் இருக்கைகள் சரிசெய்யப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டன.

இந்த பராமரிப்பு பணிகளை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார். அப்போது சட்டசபை செயலாளர் முனிசாமி உடனிருந்தார்.

பொதுசேவை மையம்

மேலும் புதுவையில் கூடுதலாக பொதுசேவை மையங்கள் ஏற்படுத்துவது தொடர்பாகவும் சபாநாயகர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

புதுவையில் பெரும்பாலான அரசு சேவைகள் இணையதளம் மூலம் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ரேசன்கார்டு பெற விண்ணப்பிப்பது, பட்டா நகல் பெறுவது உள்பட பல்வேறு சேவைகளை பெற பொதுமக்கள் பொதுசேவை மையங்களை அணுகி வருகின்றனர். இந்த பொதுசேவை மையங்கள் அதிக அளவில் இல்லாததால் பொதுமக்கள் அதிகநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த சிரமங்களை போக்கிட ஒவ்வொரு தொகுதியிலும் அதிக அளவில் பொதுசேவை மையங்களை திறக்க எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சட்டமன்ற கமிட்டி அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார்.

இடம் தேர்வு

அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், நேரு, ஜான்குமார், ரிச்சர்ட், சிவசங்கர், பாஸ்கர், கே.எஸ்.பி.ரமேஷ், அசோக் பாபு, வெங்கடேசன், சட்டசபை செயலாளர் முனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ஒவ்வொரு எம்.எல்.ஏ. அலுவலகம் அல்லது வேறொரு இடத்தில் பொதுசேவை மையம் அமைக்க அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story