துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு


துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு
x

நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்பதால் துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு நடத்தினா்.

அரியாங்குப்பம்

நாடு முழுவதும் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு நாளை மறுநாள் (1-ந் தேதி) முதல் தடை அமலாகிறது. ஏற்கனவே புதுவை மாநிலத்திலும் அரசால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தவகையில் துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தவளக்குப்பத்தில் ஆணையர் ரமேஷ் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பிளாஸ்டிக் உபயோகத்திற்கு மாற்றுப் பொருளாக பொதுமக்களுக்கு துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் ரமேஷ் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். இதில் உதவி பொறியாளர் நாகராஜன், மேலாளர் வீரம்மாள், மற்றும் பா.ஜ.க. தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கூட்டுறவு கடன் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story