ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்


ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
x

விழிப்புணர்வு நடை பயணத்தை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட விழிப்புணர்வு நடை பயணத்தை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதுவை சுகாதாரத்துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது. புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தில் அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, சமுதாயக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கம்பன் கலையரங்கம் அருகே நிறைவடைந்தது.


Next Story