வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேசிய ஓய்வுதிய திட்டத்தை கைவிடக்கோரியும், சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரியும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

காரைக்கால்

வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தில் மாற்றம், தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், புதிய ஊழியர்கள் தேர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31-ந் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில் புதுவை மாநில வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று மாலை காந்திவீதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் முரளிதரன், சங்கர், ரவீந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வங்கியின் முதன்மை மேலாளர் சுரேஷ்பாபு, காரைக்கால் வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வங்கி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.


Next Story